தேடல்

Custom Search

செவ்வாய், 10 நவம்பர், 2009

வட்டம்

உன்மீதான காதலின்
வடிவை மணித்துளிகளால்
அளந்து தோற்ற மனது..
வடிவ கணிதம்  எடுத்து
வடித்துப்பார்க்கிறது
 
எல்லா எண்ண
ஆரங்களும்
ஆதாரமாகக்கொண்டது
நீ எனும்  
அற்புதக்கவிதை...
 
நம் காதல்
வட்டப் பரப்பளவில்
நீ ஆரம்....
என் ஆதாரம்...
 
பரப்பளவை நம்
வாழ்வாகக் கொண்டால்..
பரப்பளவு = p x r x r
 
ஏற்கனவே என்
நினைவுகளைக்
கொஞ்சம் கொஞ்சமாய்
குதறி என்னை
உனதாக்கிக்கொண்டாய்...
 
நான் நீயாகிப்போன
ரகசியத்தைக் கொண்டு
அளவிட்டால்
வாழ்வு = நீ x நீ(நான் எனப்படும் நீ) x காதல்
p என்பது நம் காதல்...
 
வாழ்வின் சுற்றளவை
வாழ்நாளாய்ச் சுட்டுகிறேன்...
 
என் வாழ்நாள் = 2 x காதல் x நீ...
இன்னுமொரு மடங்கு
நீயும் காதலும்
நீடிக்குமெனின்
மேலும் உயிர்த்திருப்பேன்...
 
இங்கும் நான்
என்பது துளியும்
அவசியமில்லாதிருக்கிறது...
நான் நீயாகிவிட்ட
காரணத்தால்...
 
உன்னைச் சுற்றிச்சுற்றி
வட்டமிட்டுத் தோற்கிறது
என் சிந்தனை....
திட்டமிட்டு என்னைக்
கொலை செய்கிறது
உன் வஞ்சனை...
 
வட்ட விழிகளின்
திட்டப்பார்வைகள் இந்த
வெட்டவெளி இதயத்தைச்
சுட்டுச் சுட்டு தின்றன...
 
ஒவ்வொரு முறையும்
எனைக் காவுகொள்ளத்
துடித்துக்கொண்டிருக்கும்
நீள்வட்டக் கவிதை 
அழகிய உன் முகம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக