தேடல்

Custom Search

புதன், 11 நவம்பர், 2009

அனைத்துக்கணம்...

 
உன் இழப்புகள்
பெய்த மழையில்...
கனமான இதயத்துடன்
கணிதத்தில்
கணம் படிக்கிறது மனது...
 
நான் èø நீ = நீ èø நான் = காதல்         (èø = சேர்ப்புக்கணம்)
நான் æö நீ = Æ                                            (æö = வெட்டுக்கணம்)
நீ æö நான் = நீ

எனில்
நானில்லா நீ = நீயாகவே இருக்கிறாய்...
நான்தான் நானாயில்லை...

வெறுமையால் நிரப்பப்படுகிறேன்...
நான் = சுழியம்...
நம் காதல்  = S    (S = அனைத்துக்கணம்)...


நீயும் நானும்
இணைவது காதல்...
அது சேர்ப்புக்கணம்...
 
உன்னைப் பிரிவதில்
வெற்றுப்பக்கங்களால்
நிறப்பப்பட்ட நான்
வெற்றுக்கணமாகிறேன்..
 
நீயோ
என்னையும் நீயாக்கி
அனைத்துக்கணமாய்
சிரிக்கிறாய்...
 
இதன் தீர்வை 
இவ்வாறு வரையறுக்கலாம்...
 
Æ Í நீ
எனில்
நான் Í நீ
ஆனால்
நீ Ë  நான்
 
நான் உன்
தக்க உட்கணம்...
 
உன்னிலிருந்து
என்னை எளிதாகக் 
கழித்துவிட முடியும்
ஆனால் என்னிலிருந்து
உன்னைக்கழிப்பது
வரையரைக்கு ஒவ்வாததாகும்...
 
உன்னில் (நான்) = நீ - நான்...
உன்னில் (நான்)' = நீ
இந்தச் சமன்பாட்டில்
நான் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் நீ
என் முழு நிரப்பி...
 
நீ இல்லாத போதுமட்டும்
வெறுமையால் நிரப்பப்படுகிறேன்...
உன் அழகின்முன்
நான் = சுழியம்...
நீ பிரபஞ்சம்....
நம் காதல்  = S    (S = அனைத்துக்கணம்)...

1 கருத்து:

  1. கணக்குகிற்கும் எனக்கும் ரொம்ப தூரம், அதே போல
    காதலுக்கும் எனக்கும் இருக்கும் தூரமும் அதிகம்.

    இதுக்கு பேர்தான் கணக்கு பண்ணுவதோ.

    குரு கவிதை க(ண)லக்கல்.

    பதிலளிநீக்கு