தேடல்

Custom Search

செவ்வாய், 10 நவம்பர், 2009

பின்னம்



ஏறுக்கு மாறாய்
வருகிறது உன்
மௌனப்புதிரில்
மறைந்திருக்கும் விடை...
ஏனெனில்
நீ விடையின்னதென்று
அறியவியலாத புதிர்....
 
ஆரம்பப்பள்ளியில்
புரியாத கணக்கை
காதல் பள்ளியில்
படிக்க முனைகிறேன்...
 
எண் கணிதம்
படிக்க நினைந்த என்
எண்ணம்
உன் கணிதத்தில்
சிக்கிச் சிதறுண்டுபோனது....
 
கணிதக்குறியீடுகளில்
கச்சிதமாய் ஜொலிக்கிறாய்...
நீ என்னுள்
காதலைப் பெருக்குகிறாய்...
நீ கூட்டல்...
 
என் உயிரைக்
கழிக்கிறாய்...
நீ கழித்தல்...
 
என்
கண்ணீரைப் பெருக்குகிறாய்..
நீ பெருக்கல்...
 
என்
செந்நீரை வகுக்கிறாய்...
நீ வகுத்தல்...
 
உன்னை நினைப்பது
என் மூளைக்கு
விதிக்கப்பட்ட நிகழ்தகவு...
 
காதல் சீர்வரிசையில்
ஏறுவரிசையில் உன்
அழகு....
பிரம்மிப்பில்
இறங்குவரிசையில்
என் வாழ்க்கை...
 
கண்கள் பின்னிய
வலைப்பின்னலில்
சிக்கித்தவிக்கிறது
என் உயிர்...
உன் சடைப்
பின்னலுக்கு இடையில்
மாட்டிக் கொண்டதில்
விடையற்ற
பின்னமாகிப்போனது
என் சிந்தனை....
 
காதல் கணக்குகளை
உன்னிலிருந்து
படிக்க நினைந்ததில்
தசமபின்னமாகிப்போனது
வாழ்க்கை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக