தேடல்

Custom Search

புதன், 11 நவம்பர், 2009

அனைத்துக்கணம்...

 
உன் இழப்புகள்
பெய்த மழையில்...
கனமான இதயத்துடன்
கணிதத்தில்
கணம் படிக்கிறது மனது...
 
நான் èø நீ = நீ èø நான் = காதல்         (èø = சேர்ப்புக்கணம்)
நான் æö நீ = Æ                                            (æö = வெட்டுக்கணம்)
நீ æö நான் = நீ

எனில்
நானில்லா நீ = நீயாகவே இருக்கிறாய்...
நான்தான் நானாயில்லை...

வெறுமையால் நிரப்பப்படுகிறேன்...
நான் = சுழியம்...
நம் காதல்  = S    (S = அனைத்துக்கணம்)...


நீயும் நானும்
இணைவது காதல்...
அது சேர்ப்புக்கணம்...
 
உன்னைப் பிரிவதில்
வெற்றுப்பக்கங்களால்
நிறப்பப்பட்ட நான்
வெற்றுக்கணமாகிறேன்..
 
நீயோ
என்னையும் நீயாக்கி
அனைத்துக்கணமாய்
சிரிக்கிறாய்...
 
இதன் தீர்வை 
இவ்வாறு வரையறுக்கலாம்...
 
Æ Í நீ
எனில்
நான் Í நீ
ஆனால்
நீ Ë  நான்
 
நான் உன்
தக்க உட்கணம்...
 
உன்னிலிருந்து
என்னை எளிதாகக் 
கழித்துவிட முடியும்
ஆனால் என்னிலிருந்து
உன்னைக்கழிப்பது
வரையரைக்கு ஒவ்வாததாகும்...
 
உன்னில் (நான்) = நீ - நான்...
உன்னில் (நான்)' = நீ
இந்தச் சமன்பாட்டில்
நான் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் நீ
என் முழு நிரப்பி...
 
நீ இல்லாத போதுமட்டும்
வெறுமையால் நிரப்பப்படுகிறேன்...
உன் அழகின்முன்
நான் = சுழியம்...
நீ பிரபஞ்சம்....
நம் காதல்  = S    (S = அனைத்துக்கணம்)...

செவ்வாய், 10 நவம்பர், 2009

வட்டம்

உன்மீதான காதலின்
வடிவை மணித்துளிகளால்
அளந்து தோற்ற மனது..
வடிவ கணிதம்  எடுத்து
வடித்துப்பார்க்கிறது
 
எல்லா எண்ண
ஆரங்களும்
ஆதாரமாகக்கொண்டது
நீ எனும்  
அற்புதக்கவிதை...
 
நம் காதல்
வட்டப் பரப்பளவில்
நீ ஆரம்....
என் ஆதாரம்...
 
பரப்பளவை நம்
வாழ்வாகக் கொண்டால்..
பரப்பளவு = p x r x r
 
ஏற்கனவே என்
நினைவுகளைக்
கொஞ்சம் கொஞ்சமாய்
குதறி என்னை
உனதாக்கிக்கொண்டாய்...
 
நான் நீயாகிப்போன
ரகசியத்தைக் கொண்டு
அளவிட்டால்
வாழ்வு = நீ x நீ(நான் எனப்படும் நீ) x காதல்
p என்பது நம் காதல்...
 
வாழ்வின் சுற்றளவை
வாழ்நாளாய்ச் சுட்டுகிறேன்...
 
என் வாழ்நாள் = 2 x காதல் x நீ...
இன்னுமொரு மடங்கு
நீயும் காதலும்
நீடிக்குமெனின்
மேலும் உயிர்த்திருப்பேன்...
 
இங்கும் நான்
என்பது துளியும்
அவசியமில்லாதிருக்கிறது...
நான் நீயாகிவிட்ட
காரணத்தால்...
 
உன்னைச் சுற்றிச்சுற்றி
வட்டமிட்டுத் தோற்கிறது
என் சிந்தனை....
திட்டமிட்டு என்னைக்
கொலை செய்கிறது
உன் வஞ்சனை...
 
வட்ட விழிகளின்
திட்டப்பார்வைகள் இந்த
வெட்டவெளி இதயத்தைச்
சுட்டுச் சுட்டு தின்றன...
 
ஒவ்வொரு முறையும்
எனைக் காவுகொள்ளத்
துடித்துக்கொண்டிருக்கும்
நீள்வட்டக் கவிதை 
அழகிய உன் முகம்....

இயற்கணிதம்


உன் பார்வையை x என்றும்
வார்த்தையை y என்றும் கொண்ட
சூத்திரத்தில்
காதல்விடைதேடிப்
பிடிக்க முயல்கிறேன்...
 
நான் + நீ = காதல் ...............(1)
நான் - நீ = சோகம் .............(2)
--------------------------------------------
2 நான் = காதல் + சோகம்
 
(2 என்பது மாறிலி, மற்றும் அனைத்தும் இரண்டடிமானத்தைக் கொண்டது என்பதால் 2ஐ நீக்குகிறேன்...)
 
எனவே
நான் = காதல் + சோகம் .............(3) (நீ இல்லாதபோது)
 
சமன்பாடு (2) ஐ சமன்பாடு (1)ல் பிரதியிட
(காதல் + சோகம்) + நீ = காதல்
நீ = காதல் - காதல் - சோகம்
நீ = (-) சோகம்
 
(-)சோகம் = சுகம் எனக்கொள்க...
 
எனவே
நீ = சுகம் (நான் இல்லாதபோது)
நான் = காதல் + சோகம் (நீ இல்லாதபோது)
 
 
உன் விழிகள்
மொழிந்த காதல்
பகு எண்கள்...
இதழ்கள்
மொழியாத காதல்
பகா எண்கள்..
 
சிற்சில பகுஎண்களுடன்
முழுக்க முழுக்க
பகா எண்களைக்
கட்டிக்கொண்டு
உன்
இயற்கணிதத்தில்
நுழைகிறேன் - நீயோ
வரையறையற்ற
விடைகளைக் கொடுத்து - என்
வகைக்கெழுக்களை
வகையற்ற புழுக்களாக்கி
நகைக்கிறாய் - உன்
சிகைக்குள் புதைந்து
சிதைந்துபோகிறது சிந்தனை...
இது எந்தவகைக் கெழு..?
 
எனைக்காண
வேண்டுமென எத்தனித்து
நான் காணா நேரத்தை
வேண்டுமென்றே கணித்து
ரசித்துப்பருகுகிறாய் நீயும்....
என் காதல் நோயை....
 
இதன்மூலம்
இயல்பான செயல்களின்
கணித வெளிப்பாடே
இயற்கணிதம் என்று
கொள்கிறேன்....
 
கரையைத் தீண்டுதல்
அலையின் இயல்பு...
தரையைத் தீண்டுதல்
மழையின் இயல்பு...
 
ஆக்ஸிஜன் உறிஞ்சுவது
உயிரின் இயல்பு...
ஆக்ஸீகரணமடைதல்
இரும்பின் இயல்பு...
 
தெள்ளத்தெளிவென புரிகிறது...
இயற்கணிதம் என்பது
என்னவென்று...
 
விண்ணைத் தீண்டியும்
தீண்டாமல் நிலவு இன்புறுகிறது...
உன்னைத் தீண்டியும்
தீண்டாமல் நான் இ(து)ன்புறுகிறேன்...
இதுதான் இயற்கணிதம்...
 
இயல்புக்கு முற்றிலும்
முரணானது உன் காதல்...
நான் அறியாமல் என்னை
நோக்கவே விரும்புகிறாய்..
என் பார்வையை நீ
விரும்புவதில்லை...
விண்ணில் நிலவு ஜொலிப்பது
இயல்புதானென்றால் உன்
கண்மீது என்கண்
மொய்ப்பது மட்டும்...???
 
நீ என்
காதலை விரும்பிய
அளவிற்கு
என்னைவிரும்பவில்லையோ...?
 
தொடர்ச்சியாய்
என்னைத் தூண்டிவிட்டு
வேடிக்கை பார்க்கிறது உன்
எண் விளையாட்டு
இயல்பு மாறாத
இயற்கணிதமாய்...
 
மீண்டும் மீண்டும்
தெளியவைத்துக் குழப்புகிறது
உன் எண்ண விளையாட்டு...
இது என்ன விளையாட்டு...?
 
ஒருவேளை நான் உன்
இயல்பைக் கணித்திருந்தால்
இந்த இயற்கணிதத்
தேடலுக்கு
தேவையிருந்திருக்காதோ....?

வரைபடம்



வெவ்வேறு திசைகளில்
வெவ்வேறு முடிவுகளை
நோக்கிப்பறக்கும்
காலப்பறவை நாம்...

கூழாய்ப்போன நம்மை
இணைத்துப் பார்த்து
அழகுபடுத்தி
ரசிக்கிறது இந்த
பாழாய்ப்போன காதல்...

இரட்டைப்பரிணாம
வரைபடத்தில் நம்
காதலைத் தேடிப்பார்க்கிறேன்...
அது
சுழியத்தில் தொடங்கி
சுழியத்திலேயே
நடைபழகுகிறது....

காதல் என்ற அந்த
ஒற்றைவரிக் கவிதை
தவிர வேறெங்கும்
உன்னோடு
இணைந்திருக்கும் பாக்கியம்
கிட்டவேயில்லை எனக்கு...

ஆனால் ஒரு மகிழ்ச்சி..
என்னில் காதலைத்
தேடிப்பார்க்கையில்
வினாடி தாமதிக்காமல்
சுழியத்திலிருந்தே உன்
விழியம்புகள் என்
வழியமைக்கத்
தொடங்கிவிடுகின்றன...

வலது புறத்தில்
நீண்ட x அச்சில்
உன் பயணம்...
வடதுருவத்தில்
நீளும் y அச்சாக
என் பயணம்....
காதல் சுழியம்...
வாழ்க்கை இந்த
வரைபடம்...

பின்னம்



ஏறுக்கு மாறாய்
வருகிறது உன்
மௌனப்புதிரில்
மறைந்திருக்கும் விடை...
ஏனெனில்
நீ விடையின்னதென்று
அறியவியலாத புதிர்....
 
ஆரம்பப்பள்ளியில்
புரியாத கணக்கை
காதல் பள்ளியில்
படிக்க முனைகிறேன்...
 
எண் கணிதம்
படிக்க நினைந்த என்
எண்ணம்
உன் கணிதத்தில்
சிக்கிச் சிதறுண்டுபோனது....
 
கணிதக்குறியீடுகளில்
கச்சிதமாய் ஜொலிக்கிறாய்...
நீ என்னுள்
காதலைப் பெருக்குகிறாய்...
நீ கூட்டல்...
 
என் உயிரைக்
கழிக்கிறாய்...
நீ கழித்தல்...
 
என்
கண்ணீரைப் பெருக்குகிறாய்..
நீ பெருக்கல்...
 
என்
செந்நீரை வகுக்கிறாய்...
நீ வகுத்தல்...
 
உன்னை நினைப்பது
என் மூளைக்கு
விதிக்கப்பட்ட நிகழ்தகவு...
 
காதல் சீர்வரிசையில்
ஏறுவரிசையில் உன்
அழகு....
பிரம்மிப்பில்
இறங்குவரிசையில்
என் வாழ்க்கை...
 
கண்கள் பின்னிய
வலைப்பின்னலில்
சிக்கித்தவிக்கிறது
என் உயிர்...
உன் சடைப்
பின்னலுக்கு இடையில்
மாட்டிக் கொண்டதில்
விடையற்ற
பின்னமாகிப்போனது
என் சிந்தனை....
 
காதல் கணக்குகளை
உன்னிலிருந்து
படிக்க நினைந்ததில்
தசமபின்னமாகிப்போனது
வாழ்க்கை..

பிணக்கு




நீ + நான் = காதல்...
 
நான் - நீ = பூஜ்யம்
நீ - நான் = பிரபஞ்சம்...
நான் x நீ = நீ
நீ x நான் = நீ
நான் / நீ = பூஜ்யம்
நீ / நான் = வரையறுக்க முடியாது..
 
எனக்கும் உனக்கும்
உள்ள விகிதம்
பூஜ்யம் :: பிரபஞ்சம்...
 
நீ என்
வர்க்கம்தான் என்றாலும்
என்னைப் பிரிகையில்
வர்க்கமூலமாகிறாய்...
 
நான் அன்று
புரிந்துகொள்ளாத
கணக்குப்பாடத்தை
உன்னை வைத்து
புரிந்துகொள்ள முனைகிறேன்...
என்னை
பித்தன் என்கிறாய்...
 
பிச்சைப்பாத்திரத்துடன் நான்...
காதல்
பிச்சையிடக் காத்திருக்கும் நீ...
பிச்சையிடாதே...
உன் முன்
மண்டியிட்டுப்
பிச்சையேந்தவே நான்
விருப்பப்படுகிறேன்...
 
எப்படிவேண்டுமானாலும்
திட்டிக்கொள்...
பிச்சைக்காரனென்றும்
பித்தனென்றும்...
ஆனால்
அத்தனையும்
உன்னால்தான் என்பதை
ஞாபகம் வைத்துக்கொள்...
 
உன்னை நினைந்ததில்
மகிழ்வில் நனைந்ததில்
என் கணக்குகள்
பிணக்குகளாகிப்போயின...