வியாழன், 11 பிப்ரவரி, 2010
செங்கோணம்
படிக்கக் கசக்கும்
செங்கோணக்கணக்கை உன்
கயல்விழிக் கணக்கோடு
இணைத்துப் புரிகிறேன்...
எனக்கு நேர்
செங்குத்தான
எதிர்த்திக்கில்தான்
பயணிக்கிறது
உன் வாழ்க்கை...
நாம் இருவரும்
காதற்புள்ளியில்
சந்தித்துக்கொள்கிறோம்...
செவ்வகத்தைக் குறுக்காக
இரண்டாக வெட்டியதில்
கிடைப்பது
செங்கோண முக்கோணம்...
இரண்டாக
வெட்டிப்பார்க்கிறாய்...
காதல் செங்கோணம்
புதிய கோணத்தில்
புன்னகைக்கிறது...
இந்த வாழ்க்கைப்
பரப்பளவை மௌனமாய்த்
தீண்டிச்செல்கிறது இந்த
செங்கோண முக்கோணம்...
இதை
எளிய கணக்கால்
எளிதில் விளக்கலாம்...
நான் ஆண்வர்க்கம்....
நீ பெண்வர்க்கம்... (வர்க்கம் = எண் 2)
நீ 2 + நான் 2 = காதல் 2
காதல் 2 = காதல் வர்க்கம்...
இப்பொழுது புரிகிறது...
இரண்டு வெவ்வேறு
வர்க்கங்கள் ஒன்றிணையும்
மூலம் காதல்...
(Qபிணக்கு-முக்கோண
விதியின்படி
கர்ணம் = காதல்
என்பதை நினைவில் கொள்க...)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக