தேடல்

Custom Search

திங்கள், 7 டிசம்பர், 2009

திரிகோணமிதி (அ) முக்கோணவியல்



ஒப்புமை... 

செவ்விதழின் சிவப்பெழிலை
கவ்வாது கண்டுகனிந்து
எவ்விதமென இதழழகைச்
சொல்லாது நெஞ்சம்துடிந்து
கவ்வியபடி மனதொடிந்து
செல்லாததாகிப்போய் இந்தப்
பொல்லாத இதயம் - காதலை
முக்கோணத்தில் பொருத்தி
முக்தியடைய முனைகின்றது...

வர்ணனைக்கு அப்பாற்பட்டு
பல்வேறுவடிவிலக்கணத்தில்
வெவ்வேறு  கோணங்களின்
படைப்பிலக்கணமாய் நீ...
அதில் படிந்து
மகிழ்ந்துருகும் சின்னஞ்சிறு
படிமப்பொருளாய்
என் காதல்...

எந்த அழகோடும்
ஒப்புமையற்ற
பேரழகு உன் முகம்...
இப்புவிக்கு உன்முகத்தை
ஒப்புமைகாட்டித்
தோற்றுப்பழகுகிறது மனம்...

கோணங்களை வாழ்வின்
கோணல் பாதைகளாய்க் கொண்ட
எதிரெதிர் பக்கங்களாய்
நீயும் நானும்....
நம்மை சந்திக்கவைக்கும்
கர்ணம் காதல்....

மூன்றும் ஒன்றோடொன்று
முத்தமிட்டுக் கொள்வதில்
களிக்கிறது வாழ்க்கை...

Ðநான் + Ðநீ + Ðகாதல் = Ðவாழ்க்கை (1800)
இப்பொழுதுதான் புரிகிறது...
காதல் ஈர்ப்புவிசையில்
உனக்கும் எனக்குமான
நேர்கோட்டு நீட்சியை
எதிரெதிர் துருவத்தில் (1800 + 1800)
சந்திக்கவைப்பதால் வாழ்க்கை
ஒரு வட்டமென்று...

மூன்று வெவ்வேறுகோணங்களில்
ஒப்புமைப்படுத்த முயன்றும்
முடியாது தவிக்கின்றேன்....
பெண்மைக்குள்ளும்
பரிணமிக்கும்  இந்த
ஒப்புமையற்ற காதலை...

 (முக்கோணம் தொடரும்.....)